பொள்ளாச்சியில் கணவரை இழந்த பெண் தற்கொலை?!! முகநூல் காதலன் பேசாததால் விபரீதம்!!

21 November 2020, 4:11 pm
Pollachi Dead - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சியில் முகநூலில் நண்பர்களாக பழகி நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்யவுள்ள நிலையில் முகநூல் காதலன் தொலைபேசியில் பேசவில்லை என்ற காரணத்தால் பெண் தற்கொலை செய்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழிற்பேட்டை கே.எல்.எஸ். நகர்பகுதியை சேர்ந்தவர் 30 வயதான புவனேஸ்வரி. இவரது கணவர் ராமன், சென்னையில்  பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவர் ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள கேஎல்எஸ் நகர் பகுதியில் தனியே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் புவனேஸ்வரிக்கு முகநூல் மூலம் பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான காஜாமொய்தின் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. பின்பு அவருடன் அடிக்கடி தனிமையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என காஜா மொய்தினிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தனர்.

இந்நிலையில், புவனேஸ்வரி, காஜா மொய்தினை தொலைபேசியில் அடிக்கடி அழைத்த போது கைபேசி எடுக்காமல் காஜா மொய்தின் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதில் கலக்கம் அடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள போவதாக முடிவு செய்து காஜாமொய்தீனின் செல்போனிற்கு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதை பார்த்த காஜாமொய்தீன் தொழிற்பேட்டையில் உள்ள வீட்டில் சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முகநூல் நண்பர் காஜா மொய்தீன் புவனேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டினாரா? இல்லை புவனேஸ்வரியே தற்கொலை செய்துகொண்டாரா? என பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஜா மொய்தினிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் இன்னும் பல்வேறு திருப்பங்களும் உண்மைச் சம்பவங்களும் வெளிவரலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 42

0

0