செல்போன் பார்த்தபடி சாலையை கடந்த பெண் : பைக் மோதி லாரியில் சிக்கி பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 2:07 pm
Accident Dead - Updatenews360
Quick Share

கோவை : சோமனூர் அருகே செல்போன் பார்த்படியே சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் பகுதியில் பவர்ஹவுஸ் அருகே உள்ள நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் அஜாக்கிரதையாகத சாலையை கடக்க முயன்றார்.

செல்போனை பார்த்த படி வந்த பெண் லாரி வருவதை கவனித்து சாலையை கடக்க முயற்சித்த போத லாரியுடன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை அந்த பெண் கவனிக்கவில்லை.

இதனால் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பெண் மீது மோதியதில், பெண் தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் லாரி ஓட்டுனர் மற்றும் இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர் .
இந்த விபத்து தொடர்பான பதற வைக்கும் வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Views: - 236

2

0