கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு நான்கு வயதில் ஜெகதீசன் என்ற மகன் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மகேந்திரன் சமூக வலைதளம் மூலம் பழகி கடந்த மார்ச் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், தனது கணவர் மகேந்திரன் மற்றும் மாமனார் மாமியார் மீது வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்து, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முத்துமாரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: பிரதமருக்கு 74 வயசு ஆயிடுச்சு… மக்கள் முடிவு பண்ணீட்டாங்க ; காங்கிரஸ் எம்பி சொல்லும் காரணம்..!!!!!
தனது கணவரை வீட்டிலேயே குடியிருந்து வந்த நிலையில், தற்போது தன்னையும் தனது குழந்தையையும் மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டவர்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டதாகக் கூறி நான்கு வயது குழந்தையுடன் இளம்பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்டார்.
காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தரையில் அமர்ந்த இளம் பெண் தரையை விட்டு எழுந்திரிக்கவில்லை. தனக்கு நியாயம் வேண்டும் என்றும், தனது கணவனுடன் சேர்த்து வையுங்கள் என்று கண்ணீருடன் காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து தர்ணாவை கைவிட்டார்.
இளம் பெண் குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.