‘பேருந்து பயணிகளே ஜாக்கிரதை’: நிலைதடுமாறி தவறி விழுந்த பெண் பரிதாப பலி…நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

Author: Aarthi Sivakumar
21 October 2021, 3:31 pm
Quick Share

தென்காசி: சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெண் பயணி ஒருவர் பேருந்தில் இருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து எழுந்துள்ளார்.

அப்போது, நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். உடனே பேருந்தை நிறுத்திவிட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணை சக பயணிகள், ஓட்டுநர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி - பதை பதைக்க வைக்கும்  சிசிடிவி காட்சி

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருந்ததால் இந்த காட்சியானது வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.

Views: - 264

0

0