சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்: ஆசிட் வீசப்பட்ட மனைவி உயிரிழப்பு….கணவர் கைது!!

Author: Aarthi Sivakumar
31 August 2021, 11:57 am
Quick Share

சேலம்: ரேவதி என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசிய சம்பவத்தில் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ரேவதி தனது தாயுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது கணவர் ஏசுதாஸ் ரேவதி மீது ஆசிட்டை வீசி உள்ளார்.

இதில் ரேவதியின் முதுகுப்பகுதி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சேலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் தலைமறைவாக இருந்த ஏசுதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ரேவதியின் தாயாருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 234

0

0