தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ள
கஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர் ரெட்டி மற்றும் தேஜா (35) தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தேஜா தனது இரண்டு பிள்ளைகளையும் நேற்று மாலை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படியுங்க: மைனர் சிறுமியுடன் கல்லூரி மாணவன் திருமணம்.. சினிமா பாணியில் சிறுமியை கடத்திய கும்பல்!
மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததும், ஜீடிமெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் தேஜாவும் அவரது மூத்த மகன் ஹர்ஷித் ரெட்டியும் (11) சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். இளைய மகன் ஆஷிஷ் ரெட்டி (9) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் ஆனால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.
போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, தேஜா எழுதிய ஆறு பக்க தற்கொலைக் கடிதத்தை கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், தனது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டி மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குக் காரணம் அவளுடைய கண் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நிலையும் மேலும் தேஜாவின் குடும்பத்தில் இருந்த உளவியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டதால் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது.
தேஜா எப்படி தன்னையும் தன் குழந்தைகளையும் கொல்லும் நிலைக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.