17 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 33 வயது பெண்.. காதல் வலையில் மயக்கி அடிக்கடி உல்லாசம் : போக்சோவில் கைது..!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 6:11 pm
Quick Share

விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 33 வயதுப் பெண்ணை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மாயமானார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மாயமான சிறுவன் கன்னியாகுமரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், சிறுவனை மீட்டு அவனோடு, தங்கியிருந்த 33 வயதான பெண்ணையும் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில், “படிப்பைப் பாதியில் நிறுத்திய சிறுவன், ராஜபாளையம் தாலுகாவுக்குட்பட்ட தனியார் நிறுவனத்துக்கு அவ்வப்போது வேலைக்குச் சென்று வந்தபோது, நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 33 வயதுப் பெண்ணுடன் சிறுவனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளாக நாளாக திருமணமாகி குழந்தைகள் இருக்கும் அந்தப் பெண், சிறுவனைக் காதலித்து வந்திருக்கிறார். சிறுவனும், அந்தப் பெண்ணைக் காதலித்துள்ளனர்,” எனக் கூறியுள்ளனர். .

இந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வெளியூருக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். சிறுவனைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததற்காக அந்தப் பெண் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், கடிதம் எழுதி வாங்கி விட்டு, சிறுவன் அவருடைய வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Views: - 158

0

0