பத்தாண்டுகளாக நட்பாய் பழகி பல முறை பாலியல் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்து தன்னை மத போதகர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் மத போதகரால் தனக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவில் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருவதாகவும் தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாய் கூறி மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு தெரியாமல் மத போதகர் சாமுவேல் என்பவர் சென்னையில் சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளை பேசி தன்னை திட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னை பலமுறை அவர்கள் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து வைத்து இருப்பதாகவும் ஏதாவது பேசினால் அந்தப் படங்களை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனக்கு குடும்ப கஷ்டம் என கூறி 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை தன்னிடம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருவதாகவும் பணத்தை திருப்பி கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது தன்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றியுள்ளதாகவும் தன்னை போல் இனி வேற யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றும் என்றும் தன்னை ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத போதகர் சாமுவேல் பணி செய்த இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியிட மாறுதல் செய்தது காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதமே ராஜினாமா செய்ததாகவும் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பெயர்களாக பரவி வருகிறது.
இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.