வயல்வெளியில் புல் பறித்த பெண்ணிடம் வழிப்பறி : 3 பேர் கைது!!!

24 February 2021, 3:59 pm
Kanyakumari Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அழகப்பபுரம் பகுதியில் வயல் வெளியில் கால் நடைகளுக்கு புல் பறித்து கொண்டிருந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக வழிப்பறி, கோவில் கதவை உடைத்து கொள்ளை, வர்த்தக நிறுவனங்களில் பூட்டு உடைத்து கொள்ளை, வீடுகளுக்குள் புகுந்து பீரோ உடைத்து கொள்ளை உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் அழகப்பபுரம் பகுதியில் வயல் வெளியில் கால் நடைகளுக்கு புல் பறித்து கொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த தங்க கம்மல், செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு 3 மர்ம ஆசாமிகள் தப்பி ஓடினர்.

இதை யடுத்து பேச்சியம்மாள் கூச்சலிடவே கவனித்த ஊர் மக்கள் 3 பேர்களையும் பிடித்து அஞ்சுகிராமம் போலிசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மைக்கேல், எழில், ஆன்றோ, என தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0