நகைக்கடையில் விற்பனையாளரை திசை திருப்பி பணம் திருடிய பெண் : பதற வைத்த சிசிடிவி காட்சி!!

19 October 2020, 4:55 pm
Tirupur Theft - Updatenews360
Quick Share

திருப்பூர் : நகைக்கடையில் வாடிக்கையாளர் போல வந்த பெண் ஒருவர், கல்லா பெட்டியில் பணம் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யூனியன் மில் சாலையில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த நான்காம் தேதியன்று காலில் அணியும் மெட்டி வாங்குவதற்காக ஒரு பெண் வந்துள்ளார்.

அப்பொழுது மற்றொருவரிடம் வியாபாரம் செய்து வந்ததால் சிறிது நேரம் அவரை நிற்கச் சொல்லியுள்ளார். ஜெயக்குமாரின் கவனம் முழுவதும் மற்றொரு வாடிக்கையாளரிடம் இருந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பெண் உள்ளே வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டு கட்டை ஒன்றை எடுத்து தனது ஆடையில் மறைத்து அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
விற்பனையை முடித்துவிட்டு திரும்பி பார்த்த பொழுது அந்தப் பெண் இல்லாததால் இவரும் தனது பணிகளை வழக்கம்போல கவனித்து வந்துள்ளார். இதனிடையே தான் வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்த பொழுது 50 ஆயிரம் ரூபாய் பணம் குறைவாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது, மெட்டி வாங்க வந்த பச்சை நிற சேலை அணிந்த பெண்மணி பணத்தை எடுத்து ஆடையில் மறைத்து திருடிச் செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 5

0

0