தடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி!!

12 June 2021, 7:41 pm
Quick Share

தஞ்சை: கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கான கொரோனா நோய்தடுப்பு தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 5 நாட்களுக்கு மேலாக தடுப்பூசிகள் போடாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் முதல் தடுப்பூசி இன்று காலை முதல் போடப்பட்டது. இதனால் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அலைமோதியது. கும்பகோணம் காரணீஸ்வரர் நகராட்சி அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் மக்கள் தடுப்பூசி போட காத்துக்கொண்டிருந்தனர்.

வரிசையானது மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாலைகளில் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று வந்தனர்.வெயிலின் தாக்கம் காரணமாக வரிசையில் நின்ற வல்லிகண்ணன் என்ற பெண் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில்,” அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இருந்ததாகவும், தற்போது அவர் ஹார்ட் அட்டாக்கில் இருந்ததாக கூறியுள்ளனர்.

Views: - 243

0

0