திருவாரூர் : மாமனார் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லீலாவதி நகர் அக்கரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் ரவி. கூத்தாநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் இவருக்கு சூர்யா என்கிற ரகு என்னும் மகன் இருந்து வருகிறார்.
ரகுவிற்கும், நன்னிலம் அருகே உள்ள பில்லூரைச் சேர்ந்த குமாரசாமி மகள் காளியம்மாளுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் காளியம்மாளுக்கும், அவரது மாமனார் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி வீடு சம்பந்தமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, காளியம்மாள் வீட்டார் சமாதானம் பேசி, ரவிக்கு சொந்தமான அந்த மாடி வீட்டை இரண்டாக பிரித்து, முன் பக்கத்தில் காளியம்மாளும் அவரது கணவரும் தங்கியுள்ளனர். பின்பக்கத்தில் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி லலிதா ஆகியோரும் தங்கியுள்ளனர்.
நேற்று காலை காளியம்மாளுக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீடு சம்பந்தமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காளியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளியம்மாள் தனது அண்ணன் முருகேசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
முருகேசன் தான் நேரில் வந்து பேசிக் கொள்வதாக காளிம்மாளிடம் கூறியுள்ளார். இருப்பினும் காளியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காளியம்மாள் உயிரிழந்தார்.
இதனை அடுத்து காளியம்மாள் அண்ணன் முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காளியம்மாளுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலமையில் விசாரணை நடைபெறவிருக்கிறது. காளியம்மாள் இறப்பிற்கு காரணமான ரவி,சுமதி, லலிதா ஆகியோரை கைது செய்தால்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என உறவினர்கள் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.