இரு குழந்தைகளுடன் தீக்குளித்த தாய் : மதுரை அருகே சோகம்!!

28 September 2020, 12:18 pm
woman Suicide- updatenews360
Quick Share

மதுரை : கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி – தமிழ்ச்செல்வி தம்பதியினர் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் தமிழ்ச்செல்வி தன்னுடைய இரு குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் குழந்தைகள் வர்ஷா மற்றும் வர்ணிகா ஆகிய இருவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் கதவை திறந்துபார்த்தபோது இரு குழந்தைகள் உடல் கருகிய நிலையில் தமிழ்செல்வி உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திடிர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Views: - 6

0

0