காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த பெண் : நீதிமன்ற காவலுக்கு பயந்து ‘திடீர்‘ மயக்கம்!!

By: Udayachandran
11 October 2020, 1:14 pm
Woman Down Drowsy - Updatenews360
Quick Share

கோவை : செக் மோசடி மற்றும் ஏமாற்று வழக்கில் நீதிமன்ற காவலுக்கு அஞ்சி இளம் பெண் மயக்கம் அடைந்த சம்பவத்தால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வடவள்ளி அடுத்த காட்டு விநாயகர் கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 28 வயது இளம் பெண் புனிதவதி. இவர் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இட விற்பனையில் ஈடுபட்டு 5 மற்றும் 7 ரூபாய் செக் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த புணிதவதி தினமும் வடவள்ளி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். புனிதவதியின் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மோசடி வழக்கு ஒன்றில் கோவை விரைவு நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று தனது தாய் கலைவாணி மற்றும் சகோதரர் சசிகுமார் ஆகியோருடன் வடவள்ளி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த புனிதவதிக்கு கைது வாரண்ட் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புனிதா திடீரென கீழே சரிந்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் புனிதவதி மயங்கி விழுவது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Views: - 39

0

0