கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மாணவிகள் மூவர் பேசும் வீடியோ வெளியாகிறது.
நேற்றைய தினம் இது தொடர்பாக காவல்துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த வீடியோவை எடுத்த பெண்ணை போத்தனூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில் விசாரணைக்காக அவர் ஆஜரானார் .
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அந்த பெண், எவ்வித உள் நோக்கமும் இல்லாமல், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்த அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசியல் ரீதியிலான ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என கூறினார்.
மேலும் இனி அந்த பள்ளியில் பெண் குழந்தைகள் மீது தவறான கண்ணோட்டத்தில் யாரும் நடந்து கொள்ள மாட்டார்கள். இந்த சம்பவம் எதுவாயினும் தனது நோக்கம் வெற்றி அடைந்து விட்டதாக தெரிவித்தார்.
முதலில் தான் வீடியோ எடுத்ததாகவும் ஆனால் நான் எடுத்தால் ஏற்கனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தனக்கும் உள்ள விரோதம் காரணமாக எடுத்ததாக திசை திருப்புவார்கள் என்பதால் வேறு ஒரு நபரை வைத்து வீடியோ எடுத்ததாகவும் விளக்கம் அளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.