இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்: திடீரென மாயமான இளம்பெண்..காதலனை காவல்நிலையத்தில் கரம் பிடித்தார்..!!

Author: Rajesh
13 March 2022, 10:02 am
Quick Share

கன்னியாகுமரி: இன்ஸ்டாகிராம் காதலனை இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கரம்பிடித்த சம்பவம் குமரி அருகே நிகழ்ந்துள்ளது.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே காற்றாடிபொற்றை பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் சபினா. இவர் பெங்களூரில் தங்கி பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். அவருடன் அவரது சகோதரியும் படித்து வந்தார்.

கடந்த 5ம் தேதி பெங்களூரில் இருந்து சபினாவும் அவரது சகோதரியும் ரயிலில் ஊருக்குப் புறப்பட்டனர். ரயில் கரூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சபினா திடீரென மாயமானார். இதையடுத்து அவரது சகோதரி தனது பெற்றோரிடம் தகவலை தெரிவித்தார். பின்னர் கணபதி நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார் ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சபினாவின் செல்போன் டவர் உதவியுடன் அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சபினா புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது இளைஞர் ஒருவருடன் சபினா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சபினாவையும் அந்த இளைஞரையும் மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் அருண்குமார் டிரைவர் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட சபீனா மற்றும் அருண்குமாரை போலீசார் நேற்று இரவு நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் சபினா கடந்த ஆறு மாதங்களாக அருண்குமாரை இன்ஸ்டா கிராம் மூலமாக காதலித்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இரு வீட்டு பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சபினாவிடம் அவரது பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சபினா தனது காதலனுடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சபினா காதலுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் போலீசார் அவர்கள் இருவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்

Views: - 869

0

0