கோவை அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு : ரத்தக் காயங்கள் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 5:29 pm
Woman Body Found - Updatenews360
Quick Share

கோவை : சுங்கம் பைபாஸ் சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுங்கம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள முட்புதர்களுக்குள் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல் அழுகிய நிலையில் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

நேற்று மாலை பெண் சடலத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும் இவர் கடந்த சில மாதங்களாக சுங்கம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்து வீடுகள் முன்பு காயப்போட்டு இருக்கும் துணிகளை எடுத்து அணிந்து கொள்வதை அந்த பெண் வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதனால் அந்த பகுதிக்கு அவர் பரிச்சயமாக இருந்துள்ளார்.இந்த நிலையில்தான் இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலை கால் பகுதி மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மர்ம நபர்கள் அவரை கொடூரமாக தாக்கி கொன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் முதல் கட்டமாக பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த பெண்ணை யாராவது அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்பதை பற்றி விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 285

0

0