நடு வீட்டில் கருகிய நிலையில் கிடந்த பெண் சடலம் : கோவையில் பயங்கரம்!!

By: Udayachandran
8 October 2020, 7:13 pm
Burned Dead Body - Updatenews360
Quick Share

கோவை : குடியிருப்பு பகுதியில் கருகிய நிலையில் பெண்ணின் உடல் சடலமாக மீட்டது குறித்து காவல்துறையினர் கொலையா?தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 50). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா(வயது 43). இத்தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கார்த்திகா கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாததால் தனது கணவரை தன்னுடன் இருக்க அனுமதிக்காமல் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி மருத்துவர் விஜயகுமார் மனைவியை பார்த்து விட்டு சென்றவர் மருத்துவமனையிலேயே தங்கி உள்ளார். நேற்று கார்த்திகாவின் சகோதிரி வாசுமதி அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது கார்த்திகவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த வாசுமதி கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக தாளிடப்பட்டு இருந்ததுடன், துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுமதி ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் தீயில் கருகி அழுகிய நிலையில் கார்த்திகாவின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தததன் காரணமாக கார்த்திகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 43

0

0