நாம் தமிழர் கட்சி : கோவையில் 10 தொகுதிகளில் 6 இடங்களில் பெண்கள் போட்டி

8 March 2021, 11:57 am
Quick Share

கோவை: நாம் தமிழர் கட்சியின் கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களில் 6 இடங்களில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரச்சாரம் ஆகிய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தொண்டர்களை களம் இறக்குகிறார் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். 234 தொகுதிகளில் சரிசமாமாக அதாவத்ய் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார் சீமான்.

சென்னையில் நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனது கட்சியின் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி, கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் 6 இடங்களில் பெண் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நர்மதா, தொண்டாமுத்தூரில் கலையரசி,கவுண்டம்பாளையத்தில் கலாமணி, மேட்டுப்பாளையத்தில் யாஸ்மின், பொள்ளாச்சியில் லோகேஷ்வரி, வால்பாறையில் கோகிலா ஆகிய 6 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், ஆண் வேட்பாளர்களாக, கிணத்துக்கடவு தொகுதியில் உமா ஜெகதீஸ், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அப்துல் வகாப், வடக்கில் பாலேந்திரன், சூலூரில் இளங்கோவன் ஆகியோ வேட்பாளர்களாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 51

1

0

1 thought on “நாம் தமிழர் கட்சி : கோவையில் 10 தொகுதிகளில் 6 இடங்களில் பெண்கள் போட்டி

Comments are closed.