குழந்தைகளுடன் குடியிருப்பு பகுதிகளில் திருட திட்டமிடும் பெண்கள் : கோவை மக்களே உஷார்!!

19 November 2020, 2:12 pm
Theft Plan - Updatenews360
Quick Share

கோவை : பிச்சை எடுப்பது போல் குடியருப்பு பகுதிகளில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திட்டமிடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக கோவை சுந்தராபுரம், சிட்கோ, மதுக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு பெண்கள் பிச்சை எடுப்பது போல, குடியிருப்புகளில் நோட்டமிடுவதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மோகன்நகர், ஓம் சக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று குழந்தையிடன் இரண்டு பெண்கள் சந்தேகத்திடமாக சென்றுள்ளனர். யாராவது கவனித்தால் மட்டும் பிச்சை எடுப்பது நடந்து கொண்டு மற்ற நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மோகன்நகர் பகுதியில் ஒருவர் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த இரண்டு பெண்களும் அங்கிருந்த பொருட்களை கவனிப்பது அங்கு பொருத்தப்பட்டிருத்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. வீட்டு வாசல் அருகே இருந்த மூட்டைகளை ஒருவர் திறந்து பார்க்க மற்றொரு பெண் ஆள் நடமாட்டத்தை கண்காணித்துள்ளார்.

இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனிடையே சந்தேகத்திடமாக சுற்றி திரியும் மர்ம பெண்களை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 23

0

0