Categories: தமிழகம்

பொண்ணுங்க ஒன்னும் சலச்சவங்க இல்ல.. தைரியமாக வெளியில் வாங்க .. வானதி சீனிவாசன் அட்வைஸ்..!

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்தாரம் செய்யப்பட்டது, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.


இது தொழில்நுட்ப யுகம், எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் தூய்மை பணியாளரில் இருந்து உயர் அதிகாரிகள் வரை பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது? பெண்கள் எவ்வளவுதான் படித்து அறிவில் சிறந்து விளங்கினாலும், உயரிய பொறுப்புகளில் இருந்தாலும் சில ஆண்களுக்கு, அவர்கள் போகப் பொருளாகவே தெரிகின்றனர்.

பெண்ணை தாயாக, சகோதரியாக, மகளாக பார்க்க தோன்றுவதில்லை. அதனால்தான் ஜே.இ.இ. போன்ற கடினமான தேர்வில் வென்று திருச்சி என்.ஐ.டி.யில் படித்த வந்த மாணவிக்கு, கேபிள் வயர் பொருத்த வந்த ஒப்பந்த பணியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சாதாரண கூலி வேலை செய்யும் பெண்கள் முதல் படித்து உயர் பொறுப்புகளில் உள்ள பெண்கள் வரை அனைவரும் கல்வி நிலையங்கள், வேலை செய்யும் இடங்கள் என எங்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.


மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக நடிகைகள் ஊடகங்களில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது.பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோர்கள் யாரும் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் இனி, அதுபோல வேறொருவர் செய்யாமல் தடுக்கும். நிறுவனங்களும், அரசும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என அறிக்கையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

11 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

12 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

12 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

12 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

13 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

14 hours ago

This website uses cookies.