சென்னையில் அறநிலையத்துறை சார்பில் மகளிர் கல்லூரிகள் அமைக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு!!

18 July 2021, 3:51 pm
Sekar Babu - Updatenews360
Quick Share

சென்னையில் அறநிலையத்துறை சார்பில், 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் அறநிலையத்துறை சார்பில், இரண்டு புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, இந்த ஆண்டே தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, கோயில் அன்னதானம், இனி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கொரோனா காலத்தில் பயனுள்ளதாக அமைந்தது. மேலும், கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் கோவில் நிலங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அத்துடன், கோவில்களில் உள்ள வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இவர் அறநிலையத்துறை மட்டுமின்றி பல்வேறு வகைகளில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 68

0

0