வேலை நேரத்தை மாற்ற வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 1:47 pm
Scavengers Petition - Updatenews360
Quick Share

கோவை : தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும், அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரியும் சமூகநீதி தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறி இருப்பதாவது : கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வேலை துவங்கும் நேரம் ஆங்கிலேயர் காலத்தில் அதிகாலை 5.45 மணிக்கு துவங்கப்பட்டது.

இன்று வரையில் அதேநேரமே உள்ளது. இதனால் 3 மணி அளவிலேயே தூய்மைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழல் உள்ளது.

எனவே வேலை தொடங்கும் நேரத்தை காலை 7 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும். மேலும் கோவையில் தூய்மைப் பணியாளருக்கு குறைந்தபட்ச தினசரி கூலி ரூ.333 ஆக உள்ளது. இதனை 605 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 147

0

0