உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த முறைகேடு : விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!!

21 January 2021, 6:27 pm
Jallikattu - Updatenews360
Quick Share

மதுரை : அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் ஆள் மாறட்டம் செய்து முதல் பரிசு பெற்ற விவகாரம் குறித்து கோட்டாச்சியர் விசாரணைக்கு ஆட்சியர் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ஹரிகிருஷ்ணனுக்கு பதிலாக கண்ணன் என்பவர் விளையாடி முதல் பரிசை வென்றதாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

33 என்கிற எண் கொண்ட பனியனை வைத்து 4 சுற்றில் ஹரிகிருஷ்ணன் என்கிற மாடுபிடி வீரர் விளையாடினார். ஹரிகிருஷ்ணன் 4 ஆம் சுற்று வரை 7 காளை அடக்கி முன்னிலையில் இருந்த நிலையில் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஹரிகிருஷ்ணன் பனியனை அவருடைய நண்பர் கண்ணனுக்கு கொடுத்ததால் 5 ஆம் சுற்றிலிருந்து பங்கேற்ற கண்ணன் 6 காளைகளை பிடித்தார். ஒட்டுமொத்தமாக இருவரும் 13 காளைகளை பிடித்ததாதல் 5 இலட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.

இருவரும் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசான காரை பெற்றுள்ளனர். 2 ஆம் இடம் பெற்ற மாடுபிடி வீரர் கருப்பண்ணன் புகாரை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மதுரை கோட்டாச்சியர் முருகானந்தத்தை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள், ஆவணங்களை ஆய்வு செய்தும், நேரில் விசாரணை நடத்தியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். பாராம்பரிய வீர விளையாட்டும், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0