கொதித்தெழுந்த விஜயபாஸ்கர்.. தென்காசி அரசு மருத்துவமனையின் அவலம்!

Author: Hariharasudhan
10 November 2024, 2:31 pm

தென்காசி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி பாண்டி. இவருக்கு நேற்று விபத்து ஏற்பட்டதில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன் பெயரில், எக்ஸ்ரே எடுக்கச் சென்ற காளி பாண்டிக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. அங்கு எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கையில் கொடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று கேட்ட காலிபாண்டிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம் தீர்ந்து போனதால் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Crack

இந்த நிலையில், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு காளி பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ” தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில்கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம்-க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திருப்பது எலும்பு முறிவு வலியை விட மிக மோசமானது.தமிழகமெங்கும் பரவும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக்க தயார்!

அதனைத் தடுக்கின்ற பணிகளில் அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறபோதே, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்த கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 99

    0

    0