எதுவும் பேசாம ஊமை மாதிரி இருக்க முடியாது : பிரதமர் மோடி ட்விட் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 11:55 am
Mano Thangaraj - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்..

அப்போது பேசிய அவர், பால் உற்பத்தி மற்றும், பால் சேமிப்பை பெருக்குவது, உற்பத்தியாளர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வருவது போன்றவை எல்லாம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. இவையெல்லாம் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

காலத்திற்கு ஏற்றபடி எந்த துறையாக இருந்தாலும் நிர்வாக வசதிக்காக சில மாற்றங்கள் மற்றும் அணு முறைகள் தேவை இருக்கும், வாடிக்கையாளருக்கு தரமான பாலை குறைவான விலையில் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க உள்ளோம். தற்போது 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுகின்ற கொள்ளளவு ஆவினியில் உள்ளது. இதனை இந்த ஆண்டிற்குள் 70 லட்சமாக உயர்த்த பணி மேற்கொண்டு வருகிறோம்.

பிரதமர் மோடி குறித்த அமைச்சரின் டிவிட் பற்றி கேட்டபோது, இது அரசியல் தம்பி, நாங்கள் ஊமை போல் இருக்க முடியுமா ? என எதிர் கேள்வி எழுப்பினார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டம் இது ஒரு பெரிய அவமானம் ஆகும். இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்த வீர மங்கைகள் ஒரு முறை இரண்டு முறை அல்ல தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு பாஜகவினுடைய எம்பி ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சமூக ஆர்வலர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்..

இந்த அரசு ஏன் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது. அதை செய்யக்கூட ஏன் இவர்களுக்கு முடியவில்லை. இது மிகப்பெரிய அசிங்கத்தை அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது மத்திய அரசின் மிகப்பெரிய தவறு ஆகும்.

பிரதமர் குறித்த டிவிட் பற்றி மீண்டும் கேட்டபோது, எங்களுடைய எதிர்ப்பு தனிநபர் சார்ந்தது அல்ல. ஜனநாயக நாட்டில் அடிப்படை பலம் என்பது எதிர் கருத்து தெரிவிப்பது. ஜனநாயக நாட்டில் எங்களுடைய எதிர் கருத்தை தெரிக்கும் அனைத்து உரிமையும் எங்களுக்கு இருக்கிறது.

Views: - 273

0

0