மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடல் நகர் 2 வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கரிசல்குளம் கண்மாய் மறுகால் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் செல்லூர் ராஜு.
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு குறித்த கேள்விக்கு, திமுக – வில் இது புதுசு இல்லை. பல அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மாநகராட்சி விவகாரத்தில் அதிமுக புகார் அளித்ததன் காரணமாகவே முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மாநகராட்சி விவகாரத்தில் குரல் கொடுத்த அதிமுக மீது திமுக நிலைக்குழு தலைவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியை எதிர்க்கட்சிகள் உடைக்க நினைக்கிறார்கள் என்ற திருமாவளவனின் கருத்துக்கு, திருமாவளவன் திசை தெரியாமல் காட்டுக்குள் சென்றுவிட்டார்.அவருடைய தலைமை பண்பை விமர்சிக்க கூடிய அளவில் ஆகிவிட்டார்.
என் கையை பிடித்து பேசியவர் “அம்மா” என்று அம்மாவின் பண்பை பேசியவர் திருமாவளவன் திருமாவளவனுக்கு என்ன நெருக்கடி வந்துள்ளது என்று தெரியவில்லை.தலித் மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்திய அம்மாவை பற்றியெல்லாம் பேசி வருகிறார்.அவர் இயக்கத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் பாணியை மாற்றிக்கோ வேண்டும்.
விஜய் மாநாடு மற்றும் விஜய் களத்தில் வந்தால் இடையூறு ஏற்படும் என த.வெ.க வினரின் கருத்துக்கு, விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்வது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. விஜய் களத்திற்கு வர வேண்டும், எல்லோரும் களத்திற்கு வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கயோ நடக்கும் மாநாடு, செயற்குழுவில் பேசி கடைசி நேரத்தில் “இமேஜை” வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நாங்கள் வெளியில் வந்தால் இடையூறு ஏற்படும் என திரும்ப திரும்ப சொன்னால் எப்படி? விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும்.எல்லாரும் எம்.ஜி.ஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்.எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் வருகிறது” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.