பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு ஒட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
மாதிரி பாராளுமன்றத்தில் சிறப்பாக பேசிய மகளிருக்கு அவர் பரிசுகளை வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசர நிலை காரணமாக அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு கலை மற்றும் இலக்கியத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டதன் 50-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திமுக அரசுக்கு லாக்கப் மரணங்கள் புதிது அல்ல. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நடந்தபோது இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்று முகாமிட்டு தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டார்.
ஆனால் இப்போது திமுக ஆட்சியில் குடிநீரில் மலம் கலப்பது தொடங்கி பட்டியல் இனத்தினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. மக்களை காப்பாற்றி சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் தார்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை ஜனநாயக முறையில் தெரிவிக்கக் கூடிய போராட்டங்கள் கூட திமுக அரசில் அனுமதி . வழங்கப்படுவதில்லை. மதுரையில் பாஜக மகளிர் அணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்து மாட்டு கொட்டகையில் அடைத்து கொடுமைப்படுத்தினர்.
இதேபோன்றுதான் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் திமுக அரசு நடத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்த உரிமையை திமுக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
அரசியலுக்காக மத்திய அரசின் மீது திமுக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறது. மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று சொல்லவில்லை பொதுவாகவே திமுக செல்லும் சொல்லும் எந்த விஷயத்திலும் உண்மைகள் இருப்பதில்லை பொதுமக்களிடம் தங்களுடைய தவறுகளை மறைக்க, மத்திய அரசின் மீது கோபம் வர வைக்கக்கூடிய முயற்சியில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கல்வி நிதி, மெட்ரோ நிதி என பல்வேறு நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை என்பது தவறானது. நிதி கேட்பதற்கான உரிய ஆவணங்களை தருமாறு மத்திய அரசு கேட்கும்போது அதற்கு எந்த பதிலும் சொல்லாத திமுக அரசு வேண்டுமென்றே மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் தவறுக்கு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதில்லை. ஊழல் நடப்பது குறித்து கேட்டால் பதில் அளிக்க மறுப்பவர்களுக்கு எப்படி நிதி கிடைக்கும்.
2026 இல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் வேலை. அதை முடித்துவிட்டு மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய பலம் பொருந்திய கூட்டணியாக மாறும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று திமுகவை வீட்டிற்கு அனுப்பும்.
மின் கட்டண உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் முதலமைச்சரை பொருத்தவரை பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து புகைப்படம் எடுப்பதற்கு தான் ஆர்வமாக இருக்கிறார். மக்களின் பிரச்சினைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை இன்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று…
This website uses cookies.