ஆட்டோ ஓட்டி பழக ஆசையுடன் சென்ற இளைஞர்: லாரி மோதி உயிரிழந்த பரிதாபம்..!!
3 February 2021, 9:24 amகாஞ்சிபுரம்: ஆட்டோ ஓட்டி பழக நண்பருடன் சென்ற இளைஞர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியை அடுத்துள்ள புதூர் பகுதியை சார்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் சத்தியராஜ். கட்டுமான தொழிலாளியான இவர் தனது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அப்பு என்கிற ஹேம்நாத் என்பவரை ஆட்டோ ஓட்ட கற்றுகொடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனை ஏற்று, சத்தியராஜிற்கு ஹோம்நாத் கீழம்பியிலிருந்து செவிலிமேடு செல்லும் புறவழிசாலையில் ஆட்டோ ஓட்ட கற்று கொடுத்து வந்துள்ளார். அப்போது தீடிரென ஆட்டோ கட்டுபாட்டை இழந்து எதிர் திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதிவேகமாக எதிரே வந்த டாராஸ் லாரி ஆட்டோவின் மீது மோதியுள்ளது.
இதில் தலையில் பலத்த காயங்களுடன் சத்தியராஜ் உட்பட இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சத்தியராஜ் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டி பழக நண்பருடன் சென்ற இளைஞர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0