கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன.
தொழில் உலகில் சக்தி வாய்ந்த பின்புலம் உடைய BNI அமைப்பின் கோவை ரிதம் சேப்டர்-ஐ சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளம் தொழிலதிபர்கள் ஈஷா யோகா மையம் வந்து யோக பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.
ஈஷா சார்பில் இரண்டு நாள் பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதியோகி திவ்யதரிசனம், தியானலிங்கத்தில் நாத ஆராதனை, லிங்கபைரவியில் அபிஷேகம், நாட்டு மாடுகளை பராமரிக்கும் மாட்டுமனை, உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
BNI என்பது உலகளவில் 75 நாடுகளில் 300,000 உறுப்பினர்களை உடைய உலகின் முன்னணி வணிக பரிந்துரை அமைப்பு. BNI உறுப்பினர்கள் பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய BNI ஊழியர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கும், தங்களுடைய இலக்குகளையும் தாண்டி சாதிப்பதற்கும் தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.
இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள் மூலம் அவர்களின் உடல் மன நலம், திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஐங்கரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திரு. அங்கு அய்யப்பன் அவர்கள் தனது அனுபவம் குறித்து பகிர்கையில், “எனக்கு எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் இருக்கும். இங்கு வந்து இன்று காலை யோகப்பயிற்சிகள் செய்த போது நிறைய மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்துவந்தால் குடும்ப வாழ்க்கை, தொழில் என எல்லாவற்றிலும் திறம்பட இயங்க முடியும்” என்று புத்துணர்வோடு பகிர்ந்துகொண்டார்.
பேபி வேர்ல்ட் உரிமையாளர் திரு. அமர் அவர்கள், “இது மிகவும் வித்தியாசமான அனுபவம். இந்த பயிற்சிகளை தொடர்ந்தால், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் வித்தியாசமாகவும், சத்தானதாகவும் இருந்தது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
சத்குரு அவர்கள், அனைவரும் பின்பற்றும் வகையிலான எளிய யோகப்பயிற்சிகள் வழங்குவது மட்டுமல்லாமல், தொழிலதிபர்களும் திறன் மிகுந்தவர்களாக வளர அவர் வழங்கும் ‘ஈஷா இன்சைட்’ போன்ற தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஒரு வெற்றிகரமான தொழில் புரியத் தேவையான தகுதி குறித்து அவர் சொல்கையில், “எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்திப்பதை விடுத்து, நீங்கள் எதை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று பார்ப்பதாலும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளது என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது அதுவாகவே நடக்கும்” என்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.