கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை – வாளையார் எல்லையில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்திருந்த பையில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிடிபட்ட நபர்கள் மலப்புரத்தை சேர்ந்த ஆல்பின் மற்றும் கோழிக்கோடு பண்ணியங்காரை பகுதியை சேர்ந்த ஷீபா என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஷீபா பெங்களூரு சென்று ஆல்பின் மற்றும் வேறு ஒரு இளைஞருடன் சேர்ந்து கஞ்சா கடத்தி வர திட்டமிட்டதும் தெரியவந்தது.
மேலும் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சாவை எடுத்து வந்த இருவரும் கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த கலால் அதிகாரிகள் 14.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.