குடிபோதையில் முதியவரை அடித்து கொலை செய்த இளைஞர் கைது

24 June 2021, 8:33 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குடிபோதையில் முதியவரை அடித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 60 இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அக்கரை கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் 33 என்பவர் குடிபோதையில் செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த மரக்கழிகளை எடுத்துள்ளார். அதனை தட்டிக்கேட்ட கணேசனை, ரஞ்சித்குமார் அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி 50 என்பவர் ஓடிவந்து தடுக்க முயன்ற போது அவரையும் ரஞ்சித்குமார் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் தலையில் படுகாயமடைந்த கணேசனை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 178

0

0