இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது

Author: Udhayakumar Raman
24 September 2021, 9:08 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாலா( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வருடமாக கொடுங்கையூர் காமராஜ் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற நபரை பேஸ்புக் மூலம் பழகி அதன் பின்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலா எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தினேஷ்குமார் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை கட்டாயப்படுத்தி உடலுறவில்  ஈடுபட்டதாகவும் அதன் மூலம் தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும்,

தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி என்னை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தினேஷ் குமாரை அழைத்து விசாரணை செய்தார் விசாரணையில் தினேஷ்குமார் அந்த பெண்ணை ஏமாற்றி  உடலுறவில் ஈடுபட்டதோடு பலமுறை பணமும் அவரிடமிருந்து பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தினேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர்  போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 175

0

0