கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : உரிமையாளர் மீது வழக்கு பதிவு…

Author: kavin kumar
29 ஜனவரி 2022, 2:03 மணி
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மையத்தின் உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கார் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கார் பராமரிப்பு மையத்தில் இன்று பணியில் இருந்த வாழைக்குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர் மற்றும் உரிமையாளர் தனசேகர் ஆகிய இருவரும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலாஜி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த பாலாஜியின் உறவினர்கள் தகவலறிந்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உயிரிழப்புக்கு காரணமான உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யக்கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . மேலும் முற்றுகையில் ஈடுபட்ட பலாஜியின் உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைய செய்தனர்.

  • Kasthu கடிவாளம் போட்டதா பாஜக? பல்டி அடித்த கஸ்தூரி : விடாமல் துரத்தும் சர்ச்சை!
  • Views: - 2601

    0

    0