வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற இளைஞர் மயங்கி விழுந்து பலி : திருப்பூர் அருகே திக்…திக்..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2021, 7:04 pm
Bank Customer Sudden Dead -Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற வாலிபர் சுருண்டு விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் அருண் குமார் (வயது 34) . இன்று காலை இவர் பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அரசு மருத்துவமனை எதிரே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அவர் வந்த வாகனத்தை வங்கியின் முன்பாக நிறுத்தி பூட்டிவிட்டு படியில் ஏறி பணம் எடுக்க வேண்டி வரிசையில் நின்றுள்ளார். சற்று நேரத்தில் வரிசையில் நின்றிருந்த அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்துள்ளார்.

இதை கண்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அருண் குமார் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் வாலிபர் அருண் குமாரின் திடீர் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை குறித்து வருகின்றனர்.

பல்லடத்தில் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தவர் திடீரென உயிரிலந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 598

0

0