சிறையில் உள்ள நண்பனை பார்க்க பிஸ்கட் பாக்கெட்டுடன் வந்த வாலிபர்.. ஷாக்கான போலீஸ்..(வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2025, 7:00 pm

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த சிறையில் பலத்த பாதுகாப்பையும் மீறி கைதிகள் செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வபோது சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு செல்போன்கள் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: 13 வயது மாணவனை கடத்தி உல்லாசம்… கர்ப்பமான ஆசிரியை : கோர்ட் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் 80 கிராம் கஞ்சாவை பிஸ்கட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து திருட்டு வழக்கில் விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் உள்ள வேலூரைச் சேர்ந்த கவியரசு என்ற நபரை சந்திக்க வந்த போது அங்கிருந்த சிறை காவலர்கள் அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து சோதனை செய்தனர்.

அப்போது பிஸ்கட்டுகள் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முகமது சுகில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் வினோத் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் முகமது சுகில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…