பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆன இளைஞர்கள்: பைக்கில் தப்பி சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி..!!

Author: Rajesh
7 February 2022, 9:19 am
Quick Share

கோவை: பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இளைஞர்கள் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை அருகே கே என் ஜி புதூர் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன். இவர் நேற்று இரவு 9.50 மணிக்கு வந்த இளைஞர்கள் ரூபாய் 800க்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவர் போட்ட பெட்ரோலுக்கு போட்டுவிட்டு பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

அப்போது அந்த இளைஞர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்ற முயன்றுள்ளனர். இதனை கண்ட பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதி காயமடைந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் துடியலூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் இளைஞர்கள் தப்பி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 468

1

2