ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, அடுத்தடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவருடன் படித்து வந்த சமயசந்துரு (20) என்பவர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுக்கு 17 வயது இருக்கும் போதே இந்தக் காதல் மலர்ந்துள்ளது. இந்த சூழலில், இளம்பெண்ணை வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தனுஷ் (20) என்பவர் வீடியோ எடுத்து, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை சமய சந்துரு வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி…. DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!
அந்த வீடியோவை காட்டி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் இளம்பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனையும் வீடியோ எடுத்ததுடன், சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி, அடிக்கடி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனிடையே, திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இளம்பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், திருமணம் தடைபட்டுள்ளது.
அதையும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சமய சந்துரு, தனுஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சமயசந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான்(30), கவின்(19), முபின்(20), மதனீஸ்வரன்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
This website uses cookies.