நீங்க பண்ணா சரி… நாங்க பண்ணா தவறா? நல்லா இருக்கு உங்க நியாயம் : திமுகவை விமர்சித்த பாஜக!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2023, 11:57 am
BJP Stalin - Updatenews360
Quick Share

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதற்கான கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் வரும் 28-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் சரியாக இருக்கும் என எதிர்கட்சிகள் தெரிவித்தது.

மேலும் சவார்கர் பிறந்த தினத்தன்று கட்டிடம் திறக்கப்படவுள்ளதற்கும் எதிப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் எப்படி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்கலாம் என்று கேட்பவர்களின் கவனத்திற்கு. கடந்த திமுக ஆட்சியில், மார்ச் 13, 2010 ம் ஆண்டு ஓமந்தூரார் மாளிகையில் புதிய தமிழக சட்ட சபை கட்டிடத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் திறந்து வைத்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டுமென்றால், புதிய சட்டசபை கட்டிடத்தை அன்றைய ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் தானே திறந்திருக்க வேண்டும்? பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவரும் எதற்கு அழைக்கப்பட்டார்கள்? என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 386

0

0