அறிவுரை கூறிய தேங்காய் வியாபாரிக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது!!

27 December 2020, 2:16 pm
Attempt murder - Updatenews360
Quick Share

சிவகங்கை : தேவகோட்டையில் தேங்காய் கடை வியாபாரியை கத்தியால் குத்தி தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் சொர்ணக்காளை (வயது 38) தேங்காய் கடை நடத்தி வருகிறார். தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் பகுதியியை சேர்ந்த அசாருதீன் (வயது 22) பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்கள் மீது இருசக்கர வாகனத்தில் மோதுவது போல பல நாட்களாக நடந்துள்ளார்.

இதனால் சொர்ணக்காளை அசாருதீனை அழைத்து கண்டித்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நான் அப்படி தான் இருப்பேன் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

அருகில் இருந்தவர்கள் சொர்ணக்காளையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அறிந்த துணை கண்காணிப்பாளர் சபாபதி விசாரணை செய்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மறைந்து இருந்த அசாருதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 1

0

0