பூவெல்லாம் கஞ்சா வாசம் : பூந்தொட்டியில் வைத்து வளர்த்தவர் கைது!!

Author: Udhayakumar Raman
24 June 2021, 1:58 pm
Quick Share

அரியலூர்: செந்துறை அருகே குழுமூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி ஒன்றை வளர்த்த இளைஞர் வீரமணி கைதானார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் வீட்டின் பின்புறம் குளிக்கும் இடத்தில் பூந்தொட்டியில் ( பிளாஸ்டிக் குடைத்தை கட் பண்ணி) ஒரு கஞ்சா செடியை வைத்து வளர்த்துள்ளார். இந்நிலையில் கஞ்சா செடி சுமார் 5 அடி உயரத்தில் வளர்ந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கஞ்சா செடியை அகற்றி செடியை வளர்த்த வீரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அலங்காரச் செடிபோல் கஞ்சா செடியை பூந்தொட்டியில் வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 283

0

0