இளைஞரை வெட்டிவிட்டு இளம் பெண்ணை அழைத்து சென்ற கும்பல்!!
28 August 2020, 10:46 amதிருப்பூர் : உடுமலையில் சினிமாவில் வருவது போல இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு இளம் பெண்ணை அழைத்து சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் சொகுசு காரில் இளம் பெண்ணுடன் வந்த இளைஞர் காரை ஒரமாக நிறுத்திவிட்டு இளம் பெண்ணுடன் பேசிகொண்டிருந்தார். அச்சமயம் ஒரு பெண் உட்பட இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காரில் வந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் இளைஞரின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞருடன் வந்த இளம்பெண்ணை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டனர். இதனிடையே அரிவாளால் வெட்டுபட்ட இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வெட்டுபட்ட இளைஞர் பெயர் இர்பான் என்பதும், இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், பெண்ணின் சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இவரை வெட்டிவிட்டு சென்றதாகவும் இர்பான் கூறியதாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். காரில் வந்த இளைஞரின் கையை வெட்டிவிட்டு இளம்பெண்ணை அழைத்துகொண்டு சினிமா பாணியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பவத்தால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..