ஜிம்மில் இருந்து இளைஞர்கள் சடலம் மீட்பு… கஞ்சா போதையில் கொலையா? உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் அருகே உடற்பயிற்சி கூடத்தில் வெட்டுக் காயங்களுடன் மூன்று பேர் உள்ளதாக நேற்று முன்தினம் 1.30 மணி அளவில் செங்குன்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது
அந்த தகவல் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது அங்கு இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சடலமாக இருந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தார்.
இரண்டு பேர் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில் பெருங்காவூர் காமராஜர் தெரு சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் 20 விஜய் 26 இருவர் கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் படுகாயம் அடைந்தவர் அஜய் 27 முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்தனரா? அல்லது இரு தரப்பு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்தனரா? என்ற கோணத்தில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கண்ணம்பாலையம் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் பொருளரசன் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் பொருளரசன் தரப்பை சேர்ந்த விஜய் ஸ்ரீகாந்த் அஜய் உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளில் வெட்டியதில் இருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தமிழரசன் தரப்பை சேர்ந்த அஜித் டில்லி நரேஷ் மணிகண்டன், ஶ்ரீகாந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.