மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை: வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு..!!

19 June 2021, 12:34 pm
Quick Share

கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை அடுத்த மேல் மருத்துவக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மகன் பிரவீன். இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது ஏறிய பிரவீன் அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காந்திபுரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பிரவீன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது வேலை கிடைக்காத விரக்தியில் பிரவீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து பிரவீனின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 178

0

0