கரூரில் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: போதையில் ரகளை…அச்சத்தில் பொதுமக்கள்.!!

Author: Rajesh
23 March 2022, 4:39 pm
Quick Share

கரூர்: கரூரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையுடன் உலாவரும் இளைஞர்களால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கரூர் மாநகர பேருந்து நிலையம் அருகே கஞ்சா போதையுடன் இளைஞர்கள் நாளுக்கு நாள் அடிதடி ரகளை மற்றும் பெண்களை கேலி செய்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே நுழையும் நுழைவாயில் 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கு முன் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையுடன் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் கஞ்சா போதையில் ரகளை செய்த நபரை பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அதிகமானதால் பரபரப்பு நீடித்தது.

பின்னர் புறக்காவல் நிலைய காவலர் விசாரணையில் ஈடுபட்டு அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். மதுபானக்கடை வாயிலிலும், கோயில் அருகேயும் கஞ்சா போதையுடன் சுற்றும் இளைஞர்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி வழியாக நடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Views: - 431

0

0