குடும்பத்தில் இளைஞர் மட்டும் மிஞ்சிய நிலையில் கோர விபத்தில் பலியான கொடுமை : திண்டுக்கல் அருகே சோகம்!!

8 May 2021, 7:57 pm
Dgl Accident Dead - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்ததூர் அருகே நான்கு வழிச்சாலையில் 3 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அடுத்துள்ள லட்சுமணன்பட்டியில் என்னும் இடத்தில் விட்டல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 25) மற்றும் அதை ஊரை சேர்ந்த அவரது நண்பர் நூற்பாலையில் பணியாற்றும் முருகேசன் இருவரும் வேடசந்தூரில் இருந்து தங்களது ஊருக்கு அப்பாச்சி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அதே போல் அவர்கள் பின்னாலேயே வெள்ளையகவுண்டனூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் (டிஸ்கவர்) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது லட்சுமணம்பட்டியில் அடையாள தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர் திடீரென சாலையின் சாலை தடுப்பில் திடீரென உள்ளே புகுந்தனர்.

இதனால் சாலையில் நேராக சென்று கொண்டிருந்த இவர்களுக்கு திடீரென குறுக்கே புகுந்த இருசக்கர வாகனத்தால் பார்த்ததால் நிலைதடுமாறி குறுக்கே வந்த வாகனத்தின் மீது மோதியதில் இவர்களின் இரண்டு இரு சக்கர வாகனங்களும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னால் வந்த வாகனமும் இந்த வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதால் வாகனத்தில் இருந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 2 இளைஞர்களில் கால்களில் துண்டுகளாக உடைந்தது.

இந்த விபத்துக்கு காரணமான குறுக்கே புகுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தப்பிச் சென்று விட்டனர். பலத்த காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வேடசந்தூர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வாகனம் என 3 ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலித்தபடி சம்பவ இடத்தில் காத்திருந்தன. உடனடியாக விரைந்து வந்த வேடசந்தூர் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அரை மணி நேரமாக கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர் செய்து விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

விபத்தில் உயிரிழந்த சக்திவேலின் தந்தை கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அவரது தாயும் தம்பியும் வீட்டில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்ததால் ஒரு குடும்பத்தில் சக்திவேல் மட்டுமே உயிர் மிஞ்சி இருந்த நிலையில் இன்றைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 296

0

0