இளைஞர் படுகொலை : 2 வருட பகையை தீபாவளியில் தீர்த்து கொண்ட மர்மநபர்கள்!!

14 November 2020, 6:41 pm
Cbe Murder - Updatenews360
Quick Share

கோவை : நண்பர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாட வந்த இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஆர்.எஸ்.புரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ என்பவனின் மகன் ஜனார்த்தனன். வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்த ஜனார்த்தனுக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இரு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், வினோத்குமார் என்ற இரு இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராற்றில் ஜனார்த்தனை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைத்த ஜனார்த்தனன் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் .

இதனையடுத்து ராஜூ காமராஜபுரம் பகுதியில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு இரு வருடங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குடியேறினார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையினை காமராஜர் நகர் பகுதியில் உள்ள பழைய நண்பர்களுடன் கொண்டாட ஜனார்த்தனர் வந்துள்ளார்.

அப்போது நள்ளிரவு ஒரு மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜனார்த்தனை காமராஜர் நகர் வீதியில் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தினர். கழுத்து, முதுகு, கை என உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ஜனார்த்தனன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 24

0

0