பைக்கில் சென்றவரை கீழே தள்ளி வெட்டிக் கொன்ற வழக்கு ; 3 பேர் கைது… போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
5 September 2022, 2:40 pm
Quick Share

ஊத்துக்கோட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவர் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜார் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, கடந்த 31-8-22 அன்று சென்றுள்ளார்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, விவேகானந்தா பள்ளி அருகே உள்ள வேகத்தடை அருகே அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், நிலைகுலைந்து போன ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராபின் உடன் சென்ற கமல் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் பதிவாகி இருந்த காட்சிகளைக் கொண்டு, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டசோழவரம் கார்த்திக், ராகுல், மதுரை சரவணன் உள்ளிட்டமூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், செங்குன்றம் சேதுபதி மற்றும் பாடிய நல்லூர் முத்துசரவணன் ஆகிய இரண்டு ரவுடி கோஷ்டிகளின் மோதலில், சேதுபதியின் கூட்டாளியான கானா ஆதி என்பவர் கொலை வழக்கில் முத்து சரவணன் கூட்டாளியாக செயல்பட்ட கஞ்சா விற்பனை
நபரான மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாளிகளான கமல், ராபினை கொலை செய்ய திட்டமிட்டதும், அதில் ராபினை வெட்டி கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கொலைக்கு பழி தீர்த்த கொலை சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 216

0

0