கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. பழிக்கு பழிவாங்க இளைஞர் கொலை : பரபரப்பு திருப்பத்தில் 3 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 10:26 am
Murder - Updatenews360
Quick Share

கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் இளைஞரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள கிளிக்கூடு கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் 23 வயதான பிரகாஷ். அதே பகுதியை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன். இவரது மகன் 35 வயதான அசோக்.

இந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆவார்கள். இந்த இரண்டு குடும்பத்தாருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு கிளிக்கூடு கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்து மரியாதை செய்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இதில் அசோக்கின் சித்தப்பா நல்லேந்தரன் மகன் 30 வயதான அறிவழகன் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மதியழகன், ஆனந்த், ஆகியோரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது முன்விரோதம் காரணமாக அறிவழகன் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரகாஷ் என்பவரை அசோக் மற்றும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் என 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் பிரகாசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் பிரகாசை கொலை செய்த வழக்கில் கிளிக்கூடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் 35 வயதான அசோக், திருச்சி குழுமணி பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் 35 வயதான ஆட்டோ சக்தி என்கின்ற சக்திவேல், திருச்சி பாலக்கரை எடத்தெரு காமியான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் கார்த்திக் ஆகியோரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 671

0

0