பன்றி வளர்ப்பில் முன்விரோதம் : இளைஞரைக் கொன்று குடும்பமே குற்றவாளியான அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
9 September 2021, 4:24 pm
madurai murder 1- - updatenews360
Quick Share

மதுரை அருகே பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கைத்தறி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் அருண் குமார் (22). இவர் முத்துபட்டியில் உள்ள அர்ச்சனா டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஜே.ஜே நகரில் பன்றி வளர்ப்பதில் வெங்கடேசன் மற்றும் சரவணன் என்பவரது குடும்பத்தாருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை இரு குடும்பத்தாருக்கும் வாக்குவாதம முற்றியது. இதில் அருண்குமார் வெங்கடேசன் குடும்பத்திற்கு ஆதரவாக வந்துள்ளார். இரவு சரவணன் குடும்பத்தாருடன் சரவணனின் தந்தை நாகராஜ் (55) முருகம்மாள் (48) சரவணன் (32) இரண்டாவது மகன் கார்த்திக் (30,) மூன்றாவது மகன் செல்வம் (26) உள்ளிட்ட 5 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் சம்பந்தம் இல்லாத அருண்குமார் தலையிட்டதால் ஆத்திரமடைந்த சரவணன் வீட்டில் இருந்த அரிவாளால் அருண்குமாரை தாக்க முற்பட்டார். இதைக் கண்ட ராதிகா தடுக்க முற்பட்டபோது ராதிகாவின் வலது கை சுண்டு விரல் துண்டானது. உயிருக்கு பயந்து வெங்கடேசன் தப்பி ஓடி விட, சரவணன் மற்றும் குடும்பத்தார் ஐந்து பேரும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அருண் குமாரின் கழுத்து, நாடி, முதுகுப்பகுதி என பல்வேறு இடங்களில் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்ற சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் திருப்பரங்குன்ற காவல் ஆய்வாளர் சுந்தரி, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரவணன் மற்றும் அவரது குடும்பத்தார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துதப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .

Views: - 290

0

0